Srimaha Sorna Bhairavi Sametha Sornakala Bhairavar Thirukovil


No. 721, Karkadeshwarar Kovil Street, Thiruvisanallur, Thiruvidaimarudur Taluk, Thanjavur District, Tamil Nadu 612105, India
Email: vembusidhar@gmail.com


Find Out More

Srimaha Sorna Bhairavi Sametha Sornakala Bhairavar Thirukovil


உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய, அதியற்புத திருவுருவம் கொண்ட ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் உறைந்த திருக்கோயில்.

இத்திருவாலய நுழைவு வாயிலில் ஸ்ரீமஹா சுவானரும், ஸ்ரீமஹா கருப்பண்ண சாமியும் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர்.

கிழக்கே நோக்கிய ஆலயம். வடமேற்கே ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகர், அதன் அருகே அரசு வேம்பின் கீழ் நாகர்களோடு கூடிய ஸ்ரீமஹா சொர்ண வேம்பு வாலையம்மன், அரசு வேம்பின் அடியில்10 அம்மன்கள் சூட்சுமம் ஆக இருந்து அருள்புரிகின்றனர். வடகிழக்கே தெற்கை நோக்கி ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவர், வடக்கே அதாவது குபேரன் குருவிற்குரிய திக்கிலே கற்பக மரத்தின் அடியில் அமர்ந்து ஈசான்யத்தை நோக்கி இருக்கிற ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் என திருவாலய தெய்வங்கள்.

எப்பொழுதும் முப்பொழுதும் வணங்க வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்.

வழிபாட்டு பலன்கள் :

இங்கு வந்து கால் வைக்க தலையெழுத்து மாறும். பல ஜென்ம சாப பாப தோஷங்கள் விலகும். கஷ்டங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் கரைந்து ஓடும்.

ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப்பெருமானுக்கு சம்பங்கி மாலை சாற்றி அர்ச்சனை செய்து இரு பசு நெய் தீபம் ஏற்றி 27 முறை சுற்றி வேண்ட வேண்ட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் யாவும் அகலும்.

1000 வருட பழமையான 1000 கோவில்களுக்கு சென்று வேண்டினால் என்ன பலன்கள் கிடைக்குமோ அது இந்த ஒரு திருக்கோவிலில் வந்து வேண்ட கிடைக்கும்.

அனைத்து ராசி, நட்சத்திரக் காரர்களும் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து சுக போகங்களான பணம், காசு, தங்கம், நில புலம், வீடு வாசல், திருமணம், நல்ல கணவன்- மனைவி, நல்ல படிப்பு, குழந்தை பாக்கியம், புகழ், செல்வாக்கு, உயர்ந்த பதவி, நோய் நொடியற்ற, கஷ்டங்கள் இல்லா சுகமான வாழ்வு என அனைத்தையும் பெற வணங்க வேண்டிய தெய்வம். கும்பகோணம், திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர்.

கேட்டதை கேட்டபடியும் நினைத்ததை நினைத்தபடியும் தருகின்ற கற்பக மரத்தின் அடியில் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையை சற்றே அணைத்தபடி மேல் திருக்கரங்களில் நாக பாச சூல டமருகத்துடன் அதாவது தாம் இசைக்கும் டமருகத்தின் இசையை செவிமடுத்து தம்மை வேண்ட வரும் பக்தக்கோடிகளை நாக பாசம் வீசி அருகில் அவர்களை இழுத்து திரிசூலத்தால் அவர்களது பாவங்களை போக்கியும்; மற்றும் நவநிதிகளில் இரு பெரும் நிதிகளான சங்கநிதி (இதன் மதிப்பு 1×16 பூஜ்ஜியம் கொண்டது) பத்மநிதியுடன் (இதன் மதிப்பு 1×32 பூஜ்ஜியம் கொண்டது) மடியில் பூரண அமுத கும்பத்துடன் ( இதனுள் சர்வ தேவ தேவதா தெய்வங்கள், நவநிதிகள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நோய் நொடிகளை நீக்குகிற அமிர்தம் நிறைந்தது) அபய வரத கரம் எனும் காக்கும் மற்றும் அருளும் முத்திரை தாங்கி அதாவது உள்ளன்போடு நல் நம்பிக்கையோடு தம்மிடம் பணிந்து வேண்டும் பக்தக்கோடிகளை அரவணைத்து அவர்கள் கஷ்டங்கள் யாவையும் தீர்த்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அருளுவேன் என்றும்;
ஸ்ரீமஹா சொர்ணபைரவி அம்மையோ ஓர் திருக்கரத்தால் வற்றாத ஜீவ நதி போல் அட்சயப்பாத்திரம் போல் பொங்கி பொங்கி வழிந்து கொண்டே இருக்கிற சொர்ண கும்பத்தை இறுக்கிப்பிடித்த படி
மற்றோர் திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடுப்பைத் தழுவியவாறு புன்னகை தவழும் திருமுகங்களுடன் அமர்ந்து அருள் மழை பொருள் மழை, சொர்ண மழை என பக்தக்கோடிகளுக்கு பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த தெய்வம் இவ்வுலகம் தோன்றியது முதல் எவர் மூலமும் வெளிப்படாத கலியுகத்தில் பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகரன் ஸ்வாமிகள் தியானத்தின் மூலம் 2010ஆம் ஆண்டு தான் இவ்வையகத்தை ஆண்டு அருள்புரிய அம்மையப்பனாக, ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவராக, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவராக கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரிலே 2008லே இடம் வாங்க சுப சகுணங்கள் நிறைய காட்டி உத்தரவிட்ட அந்த இடத்திலேயே வந்து அமர்ந்து அரும்பெரும் வள்ளலாய் தம்மை நாடி வரும் பக்தக்கோடிகளுக்குஅவர்கள் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 12.2.2012 அன்று குடமுழுக்கு விழா பசு, குதிரை, யானை இவைகளுடன் இனிதே நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ந்து பக்தக்கோடிகள் கோடிக்கணக்கில் இங்கு வந்து வேண்டி தங்கள் குறைகள் களையப்பட்டு எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பக்தர்களின் குறைகள் நீங்குவதற்கான யந்திரங்கள், மூலிகைகள் பத்திக்கப்பெற்று இருப்பதால் குறைகள் யாவும் நீங்கப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 9.00 மணிக்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை களும் 10.00 மணிக்கு கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பெற்ற சர்வ கஷ்டநஷ்ட உபத்திரவங்கள், கடன் தொல்லைகள், ஏவல் பில்லி சூனியங்கள் போக்குகிற மற்றும் தன பிராப்தி, சொர்ணசித்தி, காரிய சித்தி, சகல சௌபாக்கிய சித்தி தருகின்ற மூலிகைகளை கொண்டு பைரவ உபாசகர் சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர் திருக்கரங்களால் நடத்தப்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

நித்தமும் அனைத்து பைரவர்களும் வந்து கூடும் இடம். அஷ்ட லட்சுமிகளும், குபேரனும், சர்வ சித்தர் ரிஷி முனி யோகி ஞானி நாதாக்களும் வந்து வணங்குமிடம். மிகவும் சக்தி நிறை ஆலயம்.

வீட்டின் அனைத்து சுபகாரியங்கள் மற்றும் திருமணம், 60 ஆம் திருமணம், 80 ஆம் திருமணம் போன்றவைகளை இங்கு நடத்த இது மிகவும் உகந்த அதாவது அம்மையப்பன் சேர்ந்து அருகருகே அமர்ந்து அன்புடன் உறைந்த திருத்தலம்.

இங்கு தினசரி ராஹு காலங்களில், தினசரி பிரதோஷ கால வேளைகளில், சனிக்கிழமை, அம்மாவாசை, மாதங்களில் வரும் 8, 17, 26 தேதிகளில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் வழிபட கஷ்டங்கள் விலகும்.

தினசரி குளிகை காலங்கள், வியாழக்கிழமை மாலை குபேர வேளைகளில், வெள்ளிக்கிழமை சுக்ர ஓரைகளில், வியாழக்கிழமை குரு ஓரைகளில், தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் வழிபட தன பிராப்தி, சொர்ண சித்தி, காரிய சித்தி, சகல சௌபாக்கிய சித்திகளும் கிட்டும்.

அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்து வழிபட கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும்.

கடன் தொல்லைகள் தீர செவ்வாய் கிழமை மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் வந்து வேண்டி கடனை கொடுத்து வர கடன்கள் விரைவில் அடைய வழிவகைகள் பிறக்கும்.

ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகருக்கு அருகம்புல் சாற்றி தேங்காய் எண்ணெய் தீபம் போடுவது சிறப்பு.

ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலை யம்மனுக்கு செவ்வரளி சாற்றி விளக்கெண்ணெய் தீபம் போடுவது சிறப்பு.

ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவருக்கு செவ்வரளி சாற்றி அகலில் நல்லெண்ணெய் ஊற்றி 27 மிளகை சிவப்பு காட்டன் துணியில் முடிச்சு போட்டு அகலில் ஊற்றிய நல்லெண்ணெயில் முக்கி அதிலேயே வைத்து ஏற்றி வழிபட கஷ்டங்கள் யாவும் விலகும். பஞ்ச எண்ணெய் தீபம், தேங்காய் மூடியில் தீபம், பூசணிக்காய் மூடியில் தீபமும் ஏற்றலாம்.

ஸ்ரீமஹா வடுக பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு நெய் தீபமும் போட வேண்டும்.

108 காசுகளை ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் முடித்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கு சம்பங்கி மாலை சாற்றி பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து 2 பசு நெய் தீபம் ஏற்றி காசை வைத்து வழிபட்டு அந்த முடிச்சை காசு பணம் வைக்கும் பணப்பெட்டி, பீரோ, கல்லா வில் வைக்க காசு பணம் புழக்கம் நன்றாக இருக்கும்.

திருவாலயம் காலை 09.00 மணியில் இருந்து மதியம் 01.00 மணி வரையும்; மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறந்திருக்கும்.

தினசரி காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்படும். முன் அனுமதி பெற்று வரவும்.

அவரவர் கஷ்டங்கள் சரியாக ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை கள், கலச பூஜை, ஹோமம் செய்து கொள்ள, அன்னதானம் செய்ய காணிக்கை கட்டணம் செலுத்த கீழ்க்கண்ட அலைபேசியை தொடர்பு கொள்ளளவும்.

அலைபேசி: 94449 64303

ஆலய தெய்வங்களுக்கு நித்திய அபிஷேக ஆராதனைகள், வஸ்திரங்கள், தீபங்களுக்கான எண்ணெய்,தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை யாக வேள்விகளுக்குரிய பொருட்கள், அன்னதானத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, மற்ற இதர பொருட்கள் நேராக வந்து வாங்கி தருபவர்கள் வாங்கித் தரலாம். அல்லது வருமான வரி விலக்கு தரும் 12(A) கொண்ட Sri vembusidhar charitable Trust a/c க்கு பணம் அனுப்பி வைக்கலாம்.

Bank Name: City Union Bank Ltd.,

A/c No.510909010271485

IFSCode CIUB0000021

Branch: Thiruvidaimaruthur.


சொர்ண ஸ்ரீவேம்பூச்சித்தர்

இவருடைய 7, 8 வயதிலேயே மச்சமுனி தரிசனம் பெற்றவர். இறை பரம்பொருளோடு பல ஜென்ம தொடர்பு கொண்டவர். சிறு பிள்ளை பிராயத்தில் இருந்தே நிறைய ஆன்மீக அனுபவங்கள் பெற்றவர். இறைவனை பலமுறை நேருக்கு நேர் தரிசனம் பெற்றவர். காவல்துறை யில் சுருக்கெழுத்தராக, நிறைய அதாவது கிட்டத்தட்ட 27க்கும் மேற்பட்ட IPS அதிகாரிகளிடம் ஏன் தமிழக காவல் துறை DGP உட்பட அனைவரிடமும் personal ஆக முகாம் அலுவலகங்களில் மிகவும் நேர்மையாக 32 ஆண்டுகள் பணியாற்றிவர். தம்மை நாடி வந்த அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எந்தவித சிறு எதிர்பார்ப்பும் இன்றி செய்தவர். 1994 முதல் ஆன்மீகத்தில் தம்மை கஷ்டம் என்று நாடி வருபவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து சிறு சிறு பரிகாரங்கள் சொல்லி யாகத்தில் வந்து கலந்து கொள்ள சொல்லி சரி செய்து வருபவர்.

2003ல் திருவண்ணாமலை நிருதி மற்றும் வாயு லிங்கத்திற்கு அருகில் ஸ்ரீமஹா பைரவப் பெருமானால் தடுத்தாட்கொள்ள பெற்றவர். இந்த சம்பவத்திற்கு 7 ஆவது நாளில் கொல்லிமலை சித்தர் ஒருவரால் சித்தர்களுக்கான தீட்சை முறைகள், பைரவ பைரவி உபாசனை, அஷ்ட பைரவர் உபாசனை, 64 பைரவர் உபாசனை, காளி, வாலை, வாராஹி உபாசனைகள், வாசி யோகம் போன்றவைகள் பெற்று 2005ல் தன் குருநாதர் இவரது பல ஜென்ம பெயரான ஸ்ரீவேம்புச்சித்தர் என்று அழைத்து உலகத்தின் முன் மக்களுக்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்.

இவரின் ஆன்மீக பணிக்கு சிறப்பான ஒரே ஒரு எடுத்துக்காட்டு இவரிடம் ஸ்ரீமஹா பைரவப் பெருமான் தியானத்தில் தோன்றி எனக்கொரு ஆலயம் எழுப்பு என்று கேட்க இவரோ இந்த உலகம் என்று தோன்றியதோ அன்று முதல் இன்று என்னிடம் வந்து கேட்கும் வரை இதுவரை எவருக்கும் காட்டிராத அதிசய அதியற்புத திருக்காட்சியை காட்டியருளினால் திருவாலயம் எழுப்புகிறேன் என்று கூற அவ்வாறே திருக்காட்சி தந்து அருளுவோம் என்று கூறியவாறு திருக்காட்சி காட்டி அருளியதே கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரியில் உறைந்து அருளும் ஸ்ரீமஹா சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் அதிசய அதியற்புத உலகில் வேறு எங்கும் காணவியலாத திருவுருவம் ஆகும்.

News :

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை மற்றும் ஹோமம்:

வாழ்கநலத்துடன்வளர்க வளத்துடன்

நற்பவி. நற்பவி. நற்பவி

ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷன பைரவர் அனுக்கிரகம் பரிபூரணம்

வாழ்வில் சர்வ கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்பட தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு பூஜை மற்றும் ஹோமம்:

6.10.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கும் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து 10.00 மணிக்கு சர்வ கஷ்டநஷ்ட உபத்திரவங்கள், கடன் தொல்லைகள், சர்வ நோய் நொடிகள் நீங்கி தன பிராப்தி, சொர்ண சித்தி, சர்வ காரிய அனுகூலம் கிட்ட கொல்லி மலையில் இருந்து தருவிக்கப் பெற்ற அதிகசக்தி வாய்ந்த மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் இனிதே பெறும்.

ஸ்ரீமஹாசொர்ணபைரவிசமேத சொர்ணகாலபைரவர் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷனபைரவர் திருவாலய அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிசநல்லூர்
ஸ்ரீ சிவயோகிநாதர் சதுர்கால பைரவர் ஆலயத்திற்கும் ஸ்ரீகற்கடேஸ்வரர் அருமருந்து நாயகி ஆலயத்திற்கும் இடையே இயற்கை சூழல் நிறைந்த வயல்வெளியினுள் அமைந்துள்ளது.

திருவாலயவழிபாட்டுசிறப்பு:

இத்திருவாலயத்தில் வந்து கால் பதிக்க தலையெழுத்து மாறும். ஸ்ரீமஹா அம்மையப்பனை தொழுது கும்பிட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் சாதகங்கள் ஆகும். ஆயிரம் கோயில் சென்று வணங்கிய பலன் உடனே கிட்டும். மேலும் நினைத்தது நினைத்தபடி நடக்கும். கேட்டது கேட்டபடி கிடைக்கும். நல்லது நாளும் நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குவிந்து கொண்டே இருக்கும். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் கொழிக்கும்.

திருவாலயதிறப்புநேரம்:

தினசரி திருவாலயம் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையும் மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறக்கப் பெற்றிருக்கும்.

சிறப்புஅபிஷேக ஆராதனைகள் மற்றும் ஹோமம்:

ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் நமது ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் 10.00 மணிக்கு ஸ்ரீகால, ஸ்ரீஅஷ்ட, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

அதேபோல் அம்மாவாசை அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

பைரவர் அருள்வாக்கு:

தினசரி காலை 09.00 முதல் மதியம் 12.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்பெறும். முன் அனுமதி பெற்று நேரில் வரவும்.

Dr. (Hons.) S. Gunasshegaren @
Sorrna Sri Vembu siddhar Gunasshegaren Swamigal, (Bairava Upasakar)
சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர், (பைரவ உபாசகர்), ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில்,
சர்வலோக பைரவர் சமஸ்தானம், சொர்ணபுரி, 721A, கற்கடேஸ்வரர் கோயில் சாலை, திருவிசநல்லூர்,
கும்பகோணம் -612105
அலைபேசி: 94449 64303
Get Started!

Our Services

What we do - Our Services Details

Temple

Details

(Religious Institution)

Phone : +919444964303 , 9444443477
Email : vembusidhar@gmail.com
Location : Thiruvisanallur

Schedule

Opening Hour

Contact


loading...
Name
Contact
E-mail
Message
  • Address : No. 721, Karkadeshwarar Kovil Street, Thiruvisanallur, Thiruvidaimarudur Taluk, Thanjavur District, Tamil Nadu 612105, India
  • Phone : 9444964303 , 9444443477
  • Email : vembusidhar@gmail.com

Get Direction